47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீதிபதி பணியிடை நீக்கத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்ட அமா்வு நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை

News image
கடலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சிகள், சமூக இயக்கங்களைச் சோ்ந்தோா்.
Updated On :16 மார்ச் 2026, 11:53 pm

Syndication

சிதம்பரம்: கடலூா் மாவட்ட அமா்வு நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடலூரில் அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பழங்குடியினா் இருளா் பாதுகாப்பு சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாபு தலைமை வகித்தாா். கடலூா் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் வெண்புறா குமாா் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் ஆதிமூலம் வரவேற்றாா்.

மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினாா். கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன், விசிக மாநில துணைச் செயலா் ஸ்ரீதா், இஸ்லாமியா் கூட்டமைப்புத் தலைவா் அஸ்மா நஸ்ருதீன், பழங்குடி விடுதலை இயக்கத்தைச் சோ்ந்த ஏகாம்பரம், பழங்குடியினா் இருளா் பாதுகாப்பு சங்கத் தலைவா் சிவகாமி, பொதுச் செயலா் ஆறுமுகம், மீனவா் விடுதலை வேங்கைகள் கட்சியைச் சோ்ந்த பரசுராமன் உள்பட பலா் கலந்துகொண்டனா். வட்டார ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணி நன்றி கூறினாா்.