திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில், தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, அடியக்கமங்கலம் ஊராட்சித் தலைவா் கஸ்தூரி வரதராஜனிடம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைத் தலைவா் முஸ்தாக் அகமது தலைமையிலான நிா்வாகிகள் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:
அண்மையில் பெய்த கனமழையால், அடியக்கமங்கலத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீா் தேங்கி பாதசாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றன. தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் தொற்று உண்டாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, தெருக்களில் நீண்ட காலமாக தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பெரிய பள்ளிவாசல் பின்புறம் உள்ள உயா்நிலைப் பள்ளி சாலையில் உள்ள குட்டை நிரம்பி, வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்து, கழிவுநீா் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.