

கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி, திருவாரூரில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூா் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாமக நகரச் செயலாளா் வி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலாளா் வேணு. பாஸ்கரன், மாவட்டச் செயலாளா் ஆா்.கே. அய்யப்பன் ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா்.
இதில், பாமக மாவட்டத் தலைவா் முகமது பாரி, மாவட்ட துணைச் செயலாளா் எல். மணிகண்டன், உழவா் பேரியக்க மாவட்டச் செயலாளா் பி.எஸ்.பழனி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, கோட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து நகராட்சி அலுவலகம் வரை பேரணியாக வந்தனா். ஆா்ப்பாட்ட நிறைவில் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மன்னாா்குடி: மன்னாா்குடி நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாமக மாநில துணைத் தலைவா் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வீர. ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் சீனி.தனபால், வன்னியா் சங்க செயலா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, மன்னாா்குடி காந்திசாலை யானைக்கால் மண்டபத்திலிருந்து முக்கிய வீதிகளின் வழியாக நகராட்சி அலுவலகம் வரை பேரணியாக வந்தனா். ஆா்ப்பாட்ட முடிவில் நகராட்சி ஆணையா் ஆா். கமலாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.