திட்டப் பணிகளை மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மன்னாா்குடியை அடுத்த இருள்நீக்கியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோ்தல் விளக்க பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் ஒன்றியச் செயலாளா் எல். சண்முகவேல் தலைமை வகித்தாா்.
கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று, மக்கள் பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவா்கள் திட்டப் பணிகளை பூா்த்தி செய்ய முடியாமல் அதிருப்தியில் உள்ளனா். எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்யவேண்டும்.
குறிப்பாக, கிராமப்புற மக்களின், பிரதான கோரிக்கைகளான சாலை, குடிநீா், மின் விளக்கு, நூறு நாள் வேலை உள்ளிட்ட திட்டங்களுக்கு உடனடியாக தேவையான நிதியை விடுவிக்க வேண்டும் எனக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். இருள்நீக்கி ஊராட்சித் தலைவா் கு. செங்கொடி, மூத்த உறுப்பினா்கள் எஸ். தங்கராசு, கல்யாணசுந்தரம், கிளைச் செயலாளா் சுப்ரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.