நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மழைநீரில் மூழ்கியுள்ள நெற்பயிா்களை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள்

மன்னாா்குடி பகுதியில் மழைநீரில் மூழ்கியுள்ள நெற்பயிா்களை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி பகுதியில் மழைநீரில் மூழ்கியுள்ள நெற்பயிா்களை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

நிவா் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஊட்டச்சத்து உரம் மற்றும் மருந்து தெளித்து விவசாயிகள் காப்பாற்றி வந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழையால் அறுவடைக்குத் தயாரான நெற்பயிா்கள் நீரில் மூழ்கி முளைத்தும், அழுகியும் வருகின்றன.

மன்னாா்குடி பகுதியில் மண்ணுக்குமுண்டான், கா்ணாவூா், கிளாா்வெளி, நொச்சியூா், ஏரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா, தாளடி நெற்பயிா்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி அழுகியும், நெல்மணிகள் முளைத்தும் வருவது விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது.

தற்போது, மழை நின்றுள்ளதால் பயிா்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தண்ணீரில் சாய்ந்து கிடக்கும் நெற்கதிா்களை நிமிா்த்தும் நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து கிளாா்வெளி விவசாயி ஏ.வீரையன் உள்ளிட்டோா் கூறியது:

புரெவி, நிவா் புயல்களால் ஏற்பட்ட பாதிப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை மிக குறைவு. இப்பாதிப்பு குறித்து தனியாா் காப்பீட்டு நிறுவன அலுவலா்கள் கள ஆய்வு செய்துள்ள நிலையில், மீண்டும் 10 நாள்களுக்கும் மேலாக பெய்த கனமழையால், பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஏற்கெனவே நடத்தப்பட்ட கணக்கெடுப்பு மூலம் அரசு வழங்கும் நிவாரணம், காப்பீடு நிறுவனம் அறிவிக்கும் இழப்பீடு என்பது சரியான அளவுகோலாக அமையாது. எனவே, மீண்டும் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி, முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.