திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இந்திய கம்யூ. 13 இடங்களில் நாளை சாலை மறியல்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு நிவாரணம் கோரி, திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 13 இடங்களில் புதன்கிழமை (ஜன.20) சாலை மறியலில் ஈடுபட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு நிவாரணம் கோரி, திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 13 இடங்களில் புதன்கிழமை (ஜன.20) சாலை மறியலில் ஈடுபட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் முடிவு செய்துள்ளனா்.

திருத்துறைப்பூண்டி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு கூட்டம் தங்கராசு தலைமையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளா் பாலு கட்சியின் எதிா்கால செயல்பாடுகள் குறித்துப் பேசினாா்.

நாகை எம்பி எம். செல்வராசு, மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு தலைவா் வையாபுரி, முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சந்திரராமன், ஜோசப் ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில், பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி, திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 13 இடங்களில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபடுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.