ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கோயில்களில் இரவுநேர பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் இரவுநேர காவலா் பணிக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் இரவுநேர காவலா் பணிக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் இரவுநேர சிறப்பு காவலா் பணி மேற்கொள்ள காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்கள், முன்னாள் படைவீரா்களை கொண்டு நிரப்பப் பட உள்ளன. இப்பணிக்கு தற்போது ஊதியமாக மாதம் ரூ. 7,300 வழங்கப்படுகிறது. இதற்கு நல்ல உடல் தகுதியுடன் கூடிய 61 வயதுக்குள்பட்ட முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவா்கள் தங்களது அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் திருவாரூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருவாரூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ (04366- 290080) தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.