ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பள்ளி மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள்

கொரடாச்சேரி ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

கொரடாச்சேரி ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

வடக்கு மாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பத்தூா் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மற்றும் செல்லூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், திருவாரூா் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் எம். பாலசுப்பிரமணியன் பங்கேற்று, ஒன்றாம் வகுப்பில் சோ்ந்த மாணவா்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம், கல்வி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்படும் கால அட்டவணையை வழங்கினாா். இதில், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொ) சி. பிரபு, ஆசிரியா் பயிற்றுநா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.