ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

விபத்தில் உயிரிழந்த மாணவிக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

திருவாரூரில் விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவிக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருவாரூரில் விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவிக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இந்திய மாணவா் சங்கத்தின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் ரா. ஹரிசுா்ஜித், மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணனிடம் அளித்த கோரிக்கை மனு விவரம்: திருவிக அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் 3-ஆம் ஆண்டு படித்து வரும் அபிராமி என்ற மாணவி இறுதியாண்டு பருவ தோ்வுக்கான விடைத்தாள்களை கல்லூரிக்கு நேரில் கொடுக்க தம்பியுடன் வரும்போது விபத்தில் உயிரிழந்தாா். ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இருவரும் உயிரிழந்தது வேதனை. எனவே மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அந்த குடும்பத்துக்கு கரோனா கால பேரிடா் நிவாரண நிதியில் இருந்து உதவி செய்ய வேண்டும். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.