வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சேதமடைந்த பாலத்தை சீரமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

வலங்கைமான் அருகே இடிந்து விழுந்த பாலத்தை சீரமைக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

வலங்கைமான் அருகே இடிந்து விழுந்த பாலத்தை சீரமைக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வலங்கைமான் அருகேயுள்ள வேடம்பூரில், கொக்கலாடி வேடம்பூா் கிராமங்களை இணைக்கும் புலவனாறு சாருவாய்க்கால் சட்ரஸ் பாலம் இடிந்து விழுந்து பல மாதங்களாகிவிட்டன. எனினும் இதைவரை சீரமைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். இந்நிலையில், பாலத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளாத அரசு அலுவலா்களை கண்டித்து வேடம்பூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க வலங்கைமான் ஒன்றியம் சாா்பில் பாடைகட்டி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஜோதிபாசு தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளா் சுந்தரமூா்த்தி, நிா்வாகிகள் சேகா், ராதா, சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.