மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

மன்னார்குடியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மன்னார்குடியில் காங்கிரஸ் கட்சினிர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
மன்னார்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.
Updated On :12 ஜூலை 2021, 7:49 am

DIN

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மன்னார்குடியில் காங்கிரஸ் கட்சினிர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்தும் உடனடியாக விலை உயர்வை கட்டுப்படுத்திட வலியுறுத்தியும் மன்னார்குடி தேரடி காந்தி சிலை அருகே, காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி.துரை வேலன் தலைமை வகித்தர்.

நகரத் தலைவர் ஆர்.கனகவேல் முன்னிலை வகித்தார். இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நெடு வை ஜி.குணசேகரன், டி.வடுகநாதன், வட்டாரத் தலைவர்கள் மன்னார்குடி ( மேற்கு) எஸ்.செல்வராஜ், (தெற்கு) ஜெயபால், நீடாமங்கலம் என்.ஆர். பாலகிருஷ்ணன், கோட்டூர் சமுதாயம் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மகா மரியம்மன் கோவில் தெருவில் உள்ள பழைய பேருந்து நிறுத்தம் அருகே தனியார் பெட்ரோல் நிலையம் அருகே, எரிவாயு உருளை, இரு சக்கர வானத்திற்கு மாலை அணிவித்து மத்திய அரசைக் கண்டித்து முழுக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.