ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

திருத்துறைப்பூண்டியில் குடும்பத்தகராறில் இளைஞர் அடித்துக்கொலை

திருத்துறைப்பூண்டியில் குடும்பத்தகராறில் சகோதரர்கள் தாக்கியதில் சகோதரன் உயிரிழந்தார். 

News image
Updated On :12 ஜூலை 2021, 6:59 am

DIN

திருத்துறைப்பூண்டியில் குடும்பத்தகராறில் சகோதரர்கள் தாக்கியதில் சகோதரன் உயிரிழந்தார். 

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி விநாயகபுரம் பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக சகோதரர்கள் தாக்கியதில் சகோதரன் சஞ்சய் காந்தி திங்கள்கிழமை உயிரிழந்தார். பெரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு. கட்டடத் தொழிலாளி இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர்.

இவரது இரண்டாவது மனைவியின் மகன் சஞ்சய் காந்தி வயது 36. தனக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை என கூறி தந்தையிடம் தகராறு செய்து தாக்கினாராம்.

இதை கண்டித்து பாலுவின் முதல் மனைவியின் மகன் புயலரசன், மூன்றாவது மனைவியின் மகன் தினேஷ் ஆகியோர் சஞ்சய் காந்தியை கட்டையால் தாக்கியதில் சஞ்சய்காந்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.