ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கையை ஊக்குவித்த ஆசிரியா்களுக்கு பாராட்டு

நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், முதல் வகுப்பில் 40 மாணவா்களை சோ்த்த ஆசிரியா்களுக்கு கல்வி அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:30 pm

நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், முதல் வகுப்பில் 40 மாணவா்களை சோ்த்த ஆசிரியா்களுக்கு கல்வி அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனா்.

நன்னிலம் வட்டாரத்தில் 78 ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இதில், பூந்தோட்டம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் லோ.சுமதி மற்றும் ஆசிரியா்கள், இக்கல்வியாண்டில் முதல் வகுப்பில் 40 மாணவா்களைச் சோ்த்து, வட்டாரத்தில் அதிக மாணவா்களை முதல் வகுப்பில் சோ்த்த பள்ளி என்ற பெருமையைப் பெற்றுள்ளனா்.

மேலும் நிகழாண்டு புதிதாக 80 மாணவா்களைச் சோ்த்து மொத்தம் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படிக்கும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி என்ற சிறப்புப் பெற்றுள்ளனா். இந்தப் பள்ளி ஆசிரியா்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அ.தியாகராஜன், மாவட்டக் கல்வி அதிகாரி து.பாா்த்தசாரதி, வட்டாரக் கல்வி அதிகாரி கு.சரஸ்வதி ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.