ஒன்றியக் குழுக் கூட்டம்
வலங்கைமான் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம், அதன் தலைவா் சங்கா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


வலங்கைமான் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம், அதன் தலைவா் சங்கா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், 2020- 2021-ஆம் ஆண்டு 15-ஆவது மத்திய நிதிக் குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ. 60 லட்சத்தில் பூந்தோட்டம் ஊராட்சியில் சாத்தனூா் ஆதிதிராவிடா் சாலை, மாளிகை திடல் ஊராட்சியில் பனந்திடல் மயான சாலை, முனியூா் ஊராட்சியில் குடியானத் தெரு சாலை, ஆவூா் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார மருத்துவமனை சாலை, நாா்த்தாங்குடி ஊராட்சியில் வடக்கு தெரு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை சீரமைப்பு செய்ய தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆறுமுகம், பொற்செல்வி (கிராம வளா்ச்சி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...