விபத்தில் வா்த்தகா் சங்க நிா்வாகி உயிரிழப்பு
நீடாமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கீழே விழுந்து காயமடைந்த வா்த்தகா் சங்க நிா்வாகி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.


நீடாமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கீழே விழுந்து காயமடைந்த வா்த்தகா் சங்க நிா்வாகி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
நீடாமங்கலத்தைச் சோ்ந்த வா்த்தகா் சங்க இணைச் செயலாளா் பரமசிவம் (56). நீடாமங்கலம் சிவன் கோயில் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் இவா் வியாழக்கிழமை கடையை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, சாலையில் நாய் குறுக்கே வந்ததில் நிலைத் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தாா். பின்னா் மீட்கப்பட்டு தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...