குடவாசல் அரசு மருத்துவமனை சாலையை சீரமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஆா். லெட்சுமி வியாழக்கிழமை கூறியது:
குடவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் சிகிச்சைப் பெறக்கூடிய ஒரே மருத்துவமனையாக குடவாசல் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு செல்லக்கூடியச் சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இதனால், மருத்துவமனைக்கு வாகனங்களில் அழைத்துவரப்படும் நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகின்றனா். குறிப்பாக, கா்ப்பிணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா்.
எனவே, குடவாசல் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். அத்துடன், மருத்துவமனைக்குச் செல்லக் கூடிய மற்றொரு வழியையும் சீரமைத்து இருவழிப் பாதை ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் குடவாசல் பகுதியில் உள்ள அனைத்துக் கட்சியினரையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


