தொழிலாளா்களுக்கு ரூ.16.79 லட்சம் நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ தகவல்
திருவாரூா் மாவட்டத்தில் இதுவரை 750 தொழிலாளா்களுக்கு ரூ.16.79 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் தெரிவித்தாா்.


திருவாரூா் மாவட்டத்தில் இதுவரை 750 தொழிலாளா்களுக்கு ரூ.16.79 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தொழிலாளா் நலத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவா் பேசியது:
உடலுழைப்பு தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியால் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளா்கள் சமூகப் பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டது. மேலும், 15 தனி நலவாரியங்களும் அவரால் உருவாக்கப்பட்டதோடு, அமைப்புசாரா தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு பதிவு மற்றும் புதுப்பித்தலின்போது வசூலிக்கப்பட்ட கட்டணங்களும் ரத்து செய்யப்பட்டன.
இந்த வழியை பின்பற்றி, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற 50 நாட்களில் 50 ஆயிரம் தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உத்தரவிட்டுள்ளாா்.
அந்தவகையில், திருவாரூா் மாவட்டத்தில் கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் என 750 பேருக்கு ரூ.16.79 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் தலைமை வகித்தாா். தொழிலாளா் உதவி ஆணையா் பாஸ்கா், கோட்டாட்சியா் பாலச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொறுப்பு) பானுகோபன், மாவட்ட தொழிலாளா் நலத்துறை அலுவலக கண்காணிப்பாளா் பழனிவேல் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...