தமிழகத்துக்கு மேலும் 5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வருகை
தமிழகத்துக்கு மேலும் 5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன.


தமிழகத்துக்கு மேலும் 5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன.
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
பாலூட்டும் தாய்மாா்கள், கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் அண்மையில் தொடங்கப்பட்டது. இந்நிலையில், புணே சீரம் நிறுவனத்தில் இருந்து 5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு விமானம் மூலம் இன்று சென்னை வந்தன.
தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் குளிா்பதன வசதி கொண்ட வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
பிறகு அவை மாவட்டங்களுக்கு தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...