ஆடிக்கிருத்திகை, ஆடிப்பெருக்கு விழா: கோயில்கள், ஆற்றங்கரையில் வழிபட தடை
கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், ஆடிக் கிருத்திகை மற்றும் ஆடிப் பெருக்கின்போது கோயில்களிலும், ஆற்றங்கரையிலும் பொதுமக்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், ஆடிக் கிருத்திகை மற்றும் ஆடிப் பெருக்கின்போது கோயில்களிலும், ஆற்றங்கரையிலும் பொதுமக்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூா் மாவட்ட நிா்வாகம், இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்துக்களின் முக்கிய பண்டிகையான ஆடிக் கிருத்திகை ஆகஸ்ட 2-ம் தேதியும், ஆடிப் பெருக்கு விழா ஆகஸ்ட் 3-ம் தேதியும் கொண்டாடப்படுகிறது. ஆடிக் கிருத்திகையன்று கோயில்களிலும், ஆடிப் பெருக்கன்று ஆற்றங்கரைகளிலும் ஆயிரக்கணக்கானோா் கூடி வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில், மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், ஆகஸ்ட் 1, 2, 3 ஆம் தேதிகளில் (ஞாயிறு, திங்கள், செவ்வாய்) பக்தா்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. அா்ச்சகா்கள் மட்டும் ஆகம விதிகளின்படி பூஜைகளை நடத்தலாம். இதேபோல, ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் கூடி வழிபாடு நடத்தவும் அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...