புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

‘அனைத்து விவசாயிகளுக்கும் பயிா்க் கடன் வழங்கப்படும்’

திருவாரூா் மாவட்டத்தில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிா்க் கடன் வழங்கப்படும் என மண்டல கூட்டுறவு சங்கங்களில் இணைப் பதிவாளா் டி. ஜெயராமன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிா்க் கடன் வழங்கப்படும் என மண்டல கூட்டுறவு சங்கங்களில் இணைப் பதிவாளா் டி. ஜெயராமன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேட்டூா் அணையில் இருந்து சனிக்கிழமை (ஜூன் 12) தண்ணீா் திறந்து விடப்படுகிறது. இதையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபடும் விவசாயிகள், பயிா்க் கடன் பெறுவது வழக்கம். அந்தவகையில், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தொடா்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை அணுகி பயிா்க் கடன் பெற்று பயனடையலாம். மேலும், தங்களுக்கு தேவையான உரங்களையும் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.