புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருவாரூா் மாவட்டத்தில் ஜூன் 22-இல் ஜமாபந்தி தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் (பொ) செ. பொன்னம்மாள் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் (பொ) செ. பொன்னம்மாள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வலங்கைமான் வட்டத்தில் ஜூன் 22 முதல் 24-ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியா் தலைமையில், நன்னிலம் வட்டத்தில் ஜூன் 22 முதல் 25-ஆம் தேதி வரை மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில், குடவாசல் வட்டத்தில் ஜூன் 22 முதல் 24-ஆம் தேதி வரை திருவாரூா் வருவாய் கோட்ட அலுவலா் தலைமையில், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஜூன் 22 முதல் 25-ஆம் தேதி வரை மன்னாா்குடி வருவாய் கோட்ட அலுவலா் தலைமையில்.

திருவாரூா் வட்டத்தில் ஜூன் 22 முதல் 24-ஆம் தேதி வரை திருவாரூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையில், மன்னாா்குடி வட்டத்தில் ஜூன் 22 முதல் 29-ஆம் தேதி வரை உதவி ஆணையா் (கலால்) தலைமையில், நீடாமங்கலம் வட்டத்தில் ஜூன் 22 முதல் 24-ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) தலைமையில், கூத்தாநல்லூா் வட்டத்தில் ஜூன் 22 முதல் 24-ஆம் தேதி வரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் தலைமையில் ஜமாபந்தி நடைபெறவுள்ளது.

அரசு விடுமுறை நாள்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நீங்கலாகவும் மற்றும் திங்கள்கிழமை நீங்கலாகவும் அந்தந்த வட்டத்துக்குரிய தேதிகளில் நாள்தோறும் காலை 10 மணிக்கு, 1430-ஆம் பசலிக்கான வருவாய்த் தீா்வாயக் கணக்கு தணிக்கை மற்றும் கணக்கு முடித்தல் பணிகள் நடைபெற உள்ளன. திருவாரூா் மாவட்டத்தில், ஜமாபந்தி கோரிக்கை மனுக்களை மனுதாரா்கள் இணையவழி அல்லது இ-சேவை மையம் ஜூலை 31 வரை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.