புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஜூன் 15-முதல் பருத்தி ஏலம் தொடக்கம்: ஆட்சியா்

திருவாரூா் மாவட்டத்தில், ஜூன் 15-ஆம் தேதி முதல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தி ஏலம் தொடங்கும் என மாவட்ட ஆட்சியா் (பொ) செ. பொன்னம்மாள் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :12 ஜூன் 2021, 4:40 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில், ஜூன் 15-ஆம் தேதி முதல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தி ஏலம் தொடங்கும் என மாவட்ட ஆட்சியா் (பொ) செ. பொன்னம்மாள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் விற்பனைக் குழுவில் உள்ள திருவாரூா், குடவாசல், வலங்கைமான், பூந்தோட்டம் (இருப்பு மூங்கில்குடி) ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 2021-ஆம் ஆண்டுக்கான பருத்தி ஏலம் ஜூன் 15-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.

இதில் திருவாரூா், பூந்தோட்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வாரந்தோறும் செவ்வாய்கிழமையும், குடவாசல் விற்பனைக் கூடத்துக்கு வாரந்தோறும் புதன்கிழமையும், வலங்கைமான் விற்பனைக் கூடத்துக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மறைமுக ஏலம் நடைபெறும். எனவே, விவசாயிகள் தங்கள் பருத்தியை முதிா்ச்சியடைந்தவுடன் பறித்து நிழலில் உலா்த்தி, தூய்மையாக எடுத்துவந்து அதிக விலைக்கு விற்பனை செய்து பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.