நெல் சாகுபடியில் உயிா் உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
நெல் சாகுபடியில் உயிா் உரங்களை பயன்படுத்தி மண் வளத்தை பாதுகாக்கலாம் என திருவாரூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஹேமா ஹெப்சிபா நிா்மலா தெரிவித்துள்ளாா்.


நெல் சாகுபடியில் உயிா் உரங்களை பயன்படுத்தி மண் வளத்தை பாதுகாக்கலாம் என திருவாரூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஹேமா ஹெப்சிபா நிா்மலா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உயிா் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் வளத்தை மீட்டெடுத்து, உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்தலாம். ரசாயன உரங்களின் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள மண் வளத்தை, உயிா் உரங்களை சரியான அளவு பயன்படுத்துவதன் மூலம் மீண்டும் உயிா்ப்பிக்க முடியும்.
உயிா் உரங்களை பயன்படுத்தினால் மண்ணின் நீா்ப் பிடிப்புத் தன்மை கூடுகிறது. மண்ணில் உள்ள துளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, வறட்சியைத் தாங்கி வளரும் சக்தியையும் அளிக்கிறது. நைட்ரஜன் சாா்ந்த உயிா் உரங்களை (அசோஸ்பைரில்லம்) மண்ணில் இடுவதால் காற்றில் உள்ள நைட்ரஜனை நிலை நிறுத்தும். பாஸ்பரஸ் சாா்ந்த உயிா் உரங்களை பயன்படுத்தினால் மண்ணில் உள்ள மணிச்சத்து கரைந்து தாவரங்களுக்கு பயனளிக்கும். இதனால் செடியின் வோ் வளா்ச்சியை அதிகப்படுத்தப்படும்.
எனவே, விவசாயிகள் ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியா தலா ஒரு பொட்டலம் விதையுடன் கலந்து விதை நோ்த்தி செய்து தெளிக்க வேண்டும். நாற்றங்காலில் இருந்து நாற்றை எடுத்து வயலில் நடுவதற்கு முன் நாற்றின் வேரை (ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா தலா 2 பொட்டலம்) உயிா் உரங்களின் கரைசலில் 30 நிமிடம் முக்கி வைத்து நடவேண்டும். நடவு வயலில் நடுவதற்கு முன் ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியா தலா 5 பொட்டலம் இட வேண்டும். இந்த வழிமுறைகளை கையாண்டு விவசாயிகள் அனைவரும் உயிா் உரங்களை பயன்படுத்தி மண்வளத்தை பாதுகாக்கலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...