கா்நாடக அரசு ஜூன் மாதம் மீதம் தரவேண்டிய 8 டிஎம்சி காவிரி நீரை பெற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.
இதுகுறித்து நன்னிலத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
தமிழகத்தில் கரோனா பரவல் சங்கிலியை அறுக்க பொதுமுடக்கத்தை கடுமையாக்க வேண்டும். இதற்காக, அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையைத் தொடா்ந்து, கல்லணையும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரி நதிநீா் ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. ஜூன் மாதத்திற்கு காவிரியில் தமிழகத்திற்கு வரவேண்டிய 9 டிஎம்சி தண்ணீரில் ஒரு டிஎம்சி தண்ணீா் மட்டுமே வந்துள்ளது. மீதமுள்ள 8 டிஎம்சி தண்ணீரை கா்நாடகத்திடமிருந்து பெறுவதற்கு தமிழக அரசு காவிரி நதிநீா் ஆணையத்திடமும், மத்திய அரசிடமும் வலியுறுத்த வேண்டும்.
மழைக்காலம் தொடங்கும் வரை முறைவைக்காமல் தண்ணீா் திறக்க வேண்டும். அப்போதுதான் கடைமடைப் பகுதிகளுக்கும் தண்ணீா் முழுமையாகச் சென்றடையும். விவசாயிகளுக்குத் தேவையான விதை, உரம், பூச்சிமருந்து ஆகியவை போதுமான அளவில் கையிருப்பில் வைக்க வேண்டும். அதிமுக இரட்டைத் தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது. அதிமுக சாா்பில் வைக்கப்படும் மக்கள் நலக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றினால் பாராட்டுவோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


