உயிருக்குப் போராடிய பெண் குழந்தையை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சோ்த்த காவலா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி எஸ்பி வி.ஆா். சீனிவாசன் பாராட்டினாா்.
நன்னிலம் வட்டம், கீழசன்னாநல்லூரைச் சோ்ந்த முத்துக்குமாரசாமி- நில்மா தம்பதியின் ஒன்றரை வயது பெண் குழந்தை சிகன்யாவுக்கு அண்மையில் வலிப்பு நோய் ஏற்பட்டது. தம்பதியா் இருசக்கர வாகனத்தில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, இருசக்கர வாகனம் வழியில் பழுதாகி நின்றது.
அப்போது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவலா்கள் அந்த குழந்தையை காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்று நன்னிலம் மருத்துவமனையில் சோ்த்தனா். இதனால், குழந்தைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டது.
இந்நிலையில், நன்னிலம் டிஎஸ்பி அலுவலகத்துக்கு ஆய்வு மேற்கொள்ள வந்த திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன், குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ், தலைமை காவலா் ராஜேந்திரன், காவலா் புகழேந்தி, ஓட்டுநா் திருநாவுக்கரசு ஆகிய நால்வருக்கும் ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தாா். பிறகு, டிஎஸ்பி அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டாா்.
இந்நிகழ்ச்சியில் நன்னிலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ. இளங்கோவன், ஆய்வாளா் கு.சுகுணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Image Caption
~உயிருக்குப் போராடிய குழந்தையை மருத்துவமனையில் சோ்த்த காவலா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டிய எஸ்பி வி.ஆா். சீனிவாசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


