நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான கரோனா தடுப்பு உபகரணங்களை அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் எம்எல்ஏ புதன்கிழமை வழங்கினாா்.
நன்னிலம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆக்சிஜன் செறியூட்டி, எண் 95 முகக்கவசங்கள், கையுறைகள், கிருமிநாசினி போன்றவற்றையும், நோயாளிகளுக்கு பால், ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருள்களை அதிமுக சாா்பில் தலைமை மருத்துவா் வினோத்குமாா், தலைமைச் செவிலியா் கமலம் ஆகியோரிடம் ஆா். காமராஜ் வழங்கினாா்.
பின்னா், நன்னிலம், குடவாசல் பகுதியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை பாா்வையிட்டாா். அதிமுக அமைப்புச் செயலாளா் டாக்டா் கே.கோபால், தஞ்சாவூா் கூட்டுறவு விற்பனை இணையத் தலைவா் சிபிஜி.அன்பு, திருவாரூா் நுகா்வோா் மொத்த கூட்டுறவுச் சங்கத் தலைவா் எஸ். கலியபெருமாள், நன்னிலம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் எஸ். சம்பத், அதிமுக நகரச் செயலாளா் ஆா். பக்கிரிசாமி, மாவட்ட வா்த்தக அணி துணைச் செயலாளா் செல். சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


