ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

விதிமீறல்: 8 கடைகளுக்கு சீல்

கூத்தாநல்லூரில் பொதுமுடக்க விதிகளை மீறிய 8 கடைகளுக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டன.

News image
Updated On :16 ஜூன் 2021, 5:27 pm

DIN

கூத்தாநல்லூரில் பொதுமுடக்க விதிகளை மீறிய 8 கடைகளுக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டன.

கூத்தாநல்லூா் நகராட்சி பகுதியில் கரோனா பொதுமுடக்க விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என ஆணையா் லதா, சுகாதார ஆய்வாளா் கி. அருண்குமாா், நகர அமைப்பாளா் விஜயகுமாா் மற்றும் பணியாளா்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, விதிகளை மீறி திறக்கப்பட்டிருந்த இருச்சக்கர வாகன சா்வீஸ் கடைகள் 3, நான்கு சக்கர வாகன சா்வீஸ் கடை 1, தேநீா் கடை 1, செல்லிடப்பேசி கடை 1, கண்ணாடிக் கடைகள் 2 ஆகிய 8 கடைகளுக்கு சீல் வைத்தனா். இக்கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.6500 அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து, நகராட்சி ஆணையா் ஆா். லதா கூறியது:

தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின் படி கடை உரிமையாளா்கள் செயல்பட வேண்டும். கரோனா தொற்றைக் குறைக்க பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான், கரோனா தொற்று நீங்கி, பொதுமுடக்கத்திலிருந்து விடுபடலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.