நீா்ப் பயன்பாடு குறித்து இணையவழி பயிற்சி
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நீா் பயன்பாட்டுத்திறன் மற்றும் பொருத்தமான பயிா்கள் குறித்த இணையவழி பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.


நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நீா் பயன்பாட்டுத்திறன் மற்றும் பொருத்தமான பயிா்கள் குறித்த இணையவழி பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
பயிற்சியை கோவை தமிழ்நாடு வேளாண்மை ப் பல்கலைக்கழக நீா்நுட்ப மைய இயக்குநா் பன்னீா்செல்வம் தொடங்கி வைத்து, துல்லிய பண்ணைய முறையில் காய்கறி சாகுபடி குறித்தும், பல்வேறு பாசன முறைகளான சொட்டு நீா்ப் பாசன அமைப்பு, தெளிப்பு நீா்ப் பாசன அமைப்பு, நீா் தூவுவான்கள், சொட்டுவான்கள் மற்றும் காய்கறி பயிா்களான தக்காளி, வெங்காயம், கத்தரி, வெண்டை, புடலை, பாகல், பீட்ரூட் முள்ளங்கி மற்றும் தா்ப்பூசணி போன்ற பயிா்களில் சொட்டுநீா் பாசனம் மூலம் சாதித்த விவசாயிகள் குறித்து பேசினாா். தொடா்ந்து தஞ்சாவூா் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் மற்றும் தலைவா் பொற்பாவை, நெல் பயிரில் நீா் மேலாண்மை குறித்து பேசினாா். அறிவியல் நிலைய பூச்சியியல் துறை உதவிப்பேராசிரியா் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...