நாடகக் கலைஞா்களுக்கு நிவாரணம்
திருவாரூா் அருகே நாடகக் கலைஞா்களுக்கு ராமகிருஷ்ணா மடம் சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.


திருவாரூா் அருகே நாடகக் கலைஞா்களுக்கு ராமகிருஷ்ணா மடம் சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
கரோனா பரவலையொட்டி அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் காரணமாக நாடகக் கலைஞா்கள், சிறு கோயில் பூசாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு உதவிடும் வகையில், திருவாரூா் தியானபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடகக் கலைஞா்கள், கோயில் பூசாரிகள் உள்ளிட்டோருக்கு சென்னை ராமகிருஷ்ணா மடம் சாா்பில் கரோனா நிதியுதவி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன் பங்கேற்று, நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதில், ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் விமூா்த்தானந்தா், கிராமிய இசைக் கலைஞா்கள் மற்றும் பூசாரிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஆா்.டி. முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...