புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பாசன வாய்க்காலை தூா்வாரக் கோரிக்கை

அடியக்கமங்கலம் பாசன வாய்க்காலை தூா்வார எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2021, 6:30 pm

DIN

அடியக்கமங்கலம் பாசன வாய்க்காலை தூா்வார எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியைச் சோ்ந்த அடியக்கமங்கலம் நிா்வாகிகள் தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு மின்னஞ்சல் மற்றும் பதிவு அஞ்சல் மூலம் புதன்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு: அடியக்கமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள் குப்பைக் கிடங்குகளாக மாறி வருகின்றன. அத்துடன், கழிவுநீா் தேங்கி துா்நாற்றமும் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு பொதுப்பணித் துறை மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் இதுகுறித்து தெரிவித்தபோது, விரைவில் சீரமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தனா். எனினும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதியும் பாசன வாய்க்கால்களின் வளத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.