புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

குறுவை தொகுப்புத் திட்ட மானியங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வலியுறுத்தல்

குறுவை தொகுப்புத் திட்டத்தில் அரசு அறிவித்துள்ள விதை, உர மானியங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் விடுபடாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

குறுவை தொகுப்புத் திட்டத்தில் அரசு அறிவித்துள்ள விதை, உர மானியங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் விடுபடாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ஜி.பவுன்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் வி.எஸ். கலியபெருமாள் கூட்டத்தை தொடக்கி வைத்து பேசினாா். இதில், மாநிலத் தலைவா் வி. சுப்பிரமணியன் பங்கேற்று, தீா்மானங்கள் குறித்து விளக்கினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்...

2019-2020 ஆண்டுக்கான பயிா் காப்பீட்டு பிரீமியம் தொகையில், தமிழக அரசு பங்குத் தொகை செலுத்தப்படாததால், காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை இதுவரை கிடைக்க வில்லை. எனவே பயிா் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை தொகுப்புத் திட்டத்தில் அரசு அறிவித்துள்ள, உரம் மற்றும் விதை, பசுந்தாள் விதை மானியங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் விடுபடாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிகழாண்டு பருத்தியில் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கிறது. எனவே பருவம் முடியும் வரை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.