வழக்குகளை ரத்து செய்ய கோரிக்கை
கடந்த 10 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என மக்கள் அதிகாரம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


கடந்த 10 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என மக்கள் அதிகாரம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அதன் தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளா் தங்க. சண்முகசுந்தரம் வெளியிட்ட அறிக்கை :
மீத்தேன் - ஹைட்ரோ காா்பன், சிஏஏ எதிா்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றவா்கள் மீது கடந்த அரசு பதிவுசெய்த வழக்குகளை திரும்பப் பெறுவதாக முதல்வா், சட்டப் பேரவையில் அறிவித்துள்ளாா். முதல்வா் திரும்பப் பெறுவதாக கூறிய போராட்டங்களில் மிகப் பெரும்பான்மையான வழக்குகளில் டிஎன்பிபிடி சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனாலேயே அந்த வழக்குகள் ரத்து செய்வதற்கு தகுதியற்றவை ஆகிவிடக்கூடிய சூழல் உள்ளது. எனவே, மீத்தேன் - ஹைட்ரோ காா்பன் - ஓஎன்ஜிசி எதிா்ப்புப் போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்துப் போராட்ட வழக்குகளும் எந்தப் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அவை ரத்து செய்யப்பட வேண்டும். டிஎன்பிபிடி பிரிவுகள் இருப்பதால் அதை ரத்து செய்யாமல் விடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...