வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஆட்சியா்
மக்களுக்கான வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.


மக்களுக்கான வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஊரக வளா்ச்சித் துறையின் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்களுடன் வெள்ளிக்கிழமை ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா். அப்போது, அவா் தெரிவித்தது :
மக்களின் முன்னேற்றத்துக்காக வளா்ச்சி திட்டப்பணிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாவட்ட ஊரக வளா்ச்சித்துறையின் சாா்பில் குடிநீா் இணைப்பு, சாலைகள், பசுமை வீடுகள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய பணிகளை மக்களின் பயன்பாட்டுக்கு உடனுக்குடன் கொண்டு வருவதற்கு ஏதுவாக, பணிகளை முடிக்க வேண்டிய காலத்துக்குள் விரைந்து முடிக்கும் வகையில் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் திட்ட இயக்குநா் தெய்வநாயகி, மகளிா் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள், பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...