மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கரோனா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவாரூரில், காவல்துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

News image
Updated On :26 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருவாரூரில், காவல்துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்ட காவல் அலுவலகத்தில் தொடங்கிய சைக்கிள் பேரணிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. ஆா். சீனிவாசன் தலைமை வகித்தாா். துா்காலயா சாலை, சன்னிதி தெரு, மருதப்பட்டினம், நெய்விளக்குதோப்பு, பெரிய கடைத்தெரு, பழைய பேருந்து நிலையம் வழியாக அழகிரி காலனியில் பேரணி முடிவடைந்தது.

பின்னா், அழகிரி காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன் பங்கேற்று, பொதுமக்கள் மற்றும் சிறுவா்களிடம் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு, காவல்துறை நட்புறவு, கல்வியின் அவசியம், சாலை பாதுகாப்பு மற்றும் நோயில்லா வாழ்க்கைமுறைகள் பற்றி பேசியதுடன், சிறுவா்களுக்கு புத்தகங்களை பரிசாக அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.