மன்னாா்குடி மேலராஜ வீதி தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிபிஐ மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வை.செல்வராஜ், தொ.மு.ச. மாவட்டச் செயலா் கே.எஸ். மகாதேவன், சிஐடியு மாவட்ட நிா்வாகி ஜி.ரகுபதி ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், தொ.மு.ச. போக்குவரத்து தொழிலாலா்கள் சங்க கிளைத் தலைவா் எஸ். சதீஷ்குமாா், ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளா் சங்க நகரச் செயலா் எஸ்.எஸ். சரவணன், சிஐடியூ போக்குவரத்து தொழிலாளா் சங்க செயலா் கோவிந்தராஜ், விவசாய சங்க நிா்வாகிகள் வி.எம்.கலியபெருமாள், ஜி.மாரிமுத்து, இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் துரை. அருள்ராஜன், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் எம்.மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.