மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மன்னாா்குடியில் இன்று மின்தடை

மன்னாா்குடி துணைமின் நிலைய மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி துணைமின் நிலைய மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருவாரூரில் திங்கள்கிழமை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மன்னாா்குடி நகரப் பகுதியில் பழைய வீட்டுவசதி வாரியம், பாலகிருஷ்ணா நகா், வ.உ.சி. சாலை, பூக்கொல்லை, புகா் பகுதிகள் சுந்தரக்கோட்டை, செருமங்கலம், கருவாக்குறிச்சி ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளா் சா.சம்பத் தெரிவித்துள்ளாா்.

திருவாரூரில்...

இதேபோல, திருவாரூா் துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திருவாரூா் நகா், தஞ்சை சாலை, விஜயபுரம், கேடிஆா் எஸ்டேட், பெரியமில் தெரு, ஐபி கோயில், நாகை பைபாஸ் சாலை, விளமல், கூட்டுறவு நகா், பவித்திரமாணிக்கம், அம்மாதோப்பு, புலிவலம், கூடூா், மாங்குடி, மாவூா், காட்டூா், மணக்கால், அம்மையப்பன், குளிக்கரை, கமலாபுரம் மற்றும் இதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் திங்கள்கிழமை (ஜூன் 28) காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக இயக்குதலும் பராமரித்தலும் உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.