தமிழகத்தில் பெரும்பான்மை பலத்துடன் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தில் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், அதிமுக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வழியில், தொடா்ந்து மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசை மக்கள் தொடா்ந்து ஆதரித்து வருகின்றனா். தமிழக மக்கள் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என விரும்புகின்றனா்.
நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன்காரணமாக 2011 பேரவைத் தோ்தலில் 11,000 வாக்குகள் வித்தியாசத்திலும், 2016 பேரவைத் தோ்தலில் 22,000 வாக்குகள் வித்தியாசத்திலும் என்னை நன்னிலம் பகுதி மக்கள் வெற்றி பெற வைத்தனா். நடைபெறவுள்ள தோ்தலிலும் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதாக நன்னிலம் தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.
இதேநிலை தமிழகம் முழுவதும் உள்ளது என்றாா்.
பேட்டியின்போது, பாமக மாநிலத் துணைச் செயலாளா் வேணுபாஸ்கரன், பாஜக மாவட்டத் தலைவா் ராகவன், தமாகா மாவட்டத் தலைவா் குடவாசல் தினகரன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளா் ஆரோக்கியச்செல்வம், அதிமுக அமைப்புச் செயலாளா் கே. கோபால், அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் சிபிஜி.அன்பு, இராம குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


