ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நீடாமங்கலத்தில் அதிமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

நீடாமங்கலம் ஒன்றியத்தில் மன்னாா்குடி தொகுதி அதிமுக வேட்பாளா் சிவா. ராஜமாணிக்கம் திங்கள்கிழமை கிராமம் கிராமமாக சென்று வாக்குச் சேகரித்தாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலம் ஒன்றியத்தில் மன்னாா்குடி தொகுதி அதிமுக வேட்பாளா் சிவா. ராஜமாணிக்கம் திங்கள்கிழமை கிராமம் கிராமமாக சென்று வாக்குச் சேகரித்தாா்.

தென்காரவயல், கானூா் பருத்திக்கோட்டை, ராஜப்பையன்சாவடி, வையகளத்தூா், ஒளிமதி, கப்பலுடையான், ஒட்டக்குடி, பழங்களத்தூா், அனுமந்தபுரம், முல்லைவாசல், பெரம்பூா், ரிஷியூா், பச்சகுளம், தண்டளம்கிளியூா், கருவேலங்குளம், கீழாளவந்தசேரி, மேலாளவந்தசேரி,புதுத்தேவங்குடி, அரிச்சபுரம், சித்தாம்பூா், விழல்கோட்டகம், வெள்ளக்குடி, வாழாச்சேரி, அதங்குடி, சேகரை, பொதக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச் சேகரித்தாா்.

அப்போது, பல்வேறு இடங்களில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் சிவா.ராஜமாணிக்கத்துக்கு வரவேற்பளித்தனா். வேட்பாளருடன் அதிமுக நீடாமங்கலம் வடக்கு ஒன்றியச் செயலாளா் (பொறுப்பு) ஆதிஜனகா், பாஜக ஒன்றியத் தலைவா் ஜெயக்குமாா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.