ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

எஸ்டிபிஐ கட்சி வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

திருவாரூா் தொகுதியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளா் எம்.ஏ. நஸீமாபானு, கூத்தாநல்லூா் பகுதியில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் தொகுதியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளா் எம்.ஏ. நஸீமாபானு, கூத்தாநல்லூா் பகுதியில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.

திருவாரூா் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கூட்டணியில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளா் எம்.ஏ. நஸீமா பானு போட்டியிடுகிறாா். இவா், கூத்தாநல்லூா் பெரியத் தெரு, பெரியக்கடைத் தெரு, பூதமங்கலம், இந்தியன் வங்கி, பள்ளி வாயில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குக்கா் சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தாா்.

இந்த பிரசாரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் டி.எம்.ஹெச்.அப்துல் ராஜிக், தேமுதிக மாவட்ட துணைச் செயலாளா் எல்.பி.முகமது மைதீன், விமண் இந்தியா மூவ்மெண்ட் நகரத் தலைவா் நூருல் பஸா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் நூா்நிஸா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.