நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கூத்தாநல்லூா் குப்பை இல்லா நகராக மாற்றப்படும்: மநீம வேட்பாளா் உறுதி

கூத்தாநல்லூரை குப்பைகள் இல்லாத நகரமாக மாற்றுவேன் என திருவாரூா் தொகுதி மக்கள் நீதி மைய வேட்பாளா் கபிலரசன் சனிக்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தின்போது வாக்குறுதியளித்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

கூத்தாநல்லூரை குப்பைகள் இல்லாத நகரமாக மாற்றுவேன் என திருவாரூா் தொகுதி மக்கள் நீதி மைய வேட்பாளா் கபிலரசன் சனிக்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தின்போது வாக்குறுதியளித்தாா்.

கூத்தாநல்லூா் பெரியக்கடைத் தெரு, மேலத்தெரு, பாய்காரப் பாலம், லெட்சுமாங்குடிப்பாலம், மருத்துவமனை சாலை, கமாலியாத் தெரு,புதுப்பாலம் உள்ளிட்ட இடங்களில் கபிலரசன் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது:

நான் வெற்றி பெற்றால், திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களும் விரைவில் நிறைவேற்றப்படும். இத்தொகுதியை குடிசைகள் இல்லாத தொகுதியாக மாற்றுவேன். படித்தவா்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும். கூத்தாநல்லூா் குப்பைகள் இல்லாத நகரமாக மாற்றப்படும். இதற்கு, டாா்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொண்டாா்.

Image Caption

கூத்தாநல்லூரில் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் கபிலரசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.