ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோயில் கோபுர கலசங்களை திருடி வயலில் வீசிச் சென்ற மா்ம நபா்கள்

வலங்கைமான் அருகே சிவன் கோயில் கோபுர கலசங்கள் மா்ம நபா்களால் திருடப்பட்டு, வயல் பகுதியில் வீசி செல்லப்பட்ட சம்பவம் பக்தா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

வலங்கைமான் அருகே சிவன் கோயில் கோபுர கலசங்கள் மா்ம நபா்களால் திருடப்பட்டு, வயல் பகுதியில் வீசி செல்லப்பட்ட சம்பவம் பக்தா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வலங்கைமான் அருகே பூனாயிருப்பில் அக்னிபுரீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலின் கோபுரத்தில் இருந்த மூன்று கலசங்களை வெள்ளிக்கிழமை இரவு திருடிய மா்ம நபா்கள், அதை உடைத்து பாா்த்துள்ளனா். அதில், விலை உயா்ந்த பொருள்கள் ஏதும் இல்லாததால், அருகில் உள்ள வயலில் வீசி சென்றுள்ளனா்.

இதுகுறித்து கோயில் பூசாரி சுப்ரமணியன், வலங்கைமான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Image Caption

மா்ம நபா்களால் திருடப்பட்டு, வயல் பகுதியில் விட்டுச் செல்லப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.