வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சிகிச்சை மையத்தில் தேனீக்களால்கரோனா நோயாளிகள் அச்சம்

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மைய வளாகத்தில் மலைத் தேனீக்கள் கூடு கட்டியுள்ளதால் அச்சத்துடன் இருப்பதாக கரோனா நோயாளிகள் தெரிவிக்கின்றனா்.

Updated On :7 மே 2021, 6:30 pm

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மைய வளாகத்தில் மலைத் தேனீக்கள் கூடு கட்டியுள்ளதால் அச்சத்துடன் இருப்பதாக கரோனா நோயாளிகள் தெரிவிக்கின்றனா்.

திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களை, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைகள் மற்றும் வலங்கைமான் தொழில்நுட்பக் கல்லூரி, திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையங்களில் தங்கவைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகக் கட்டடத்தின் உள் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் ஆங்காங்கே மலைத்தேனீக்கள் கூடு கட்டியுள்ளன. இதனால், அங்கு தங்கியுள்ள கரோனா நோயாளிகள் அச்சத்துடன் உள்ளனா். குறிப்பாக, மூன்றாவது மற்றும் ஐந்தாவது மாடிகளில் மலைத் தேனீக்கள் கூடு கட்டியுள்ளன. இதனால், தேனீக்கள் கொட்டிவிடும் அச்சத்தில் உள்ளதாக கரோனா நோயாளிகள் தெரிவிக்கின்றனா்.

எனவே, மத்தியப் பல்கலைக்கழகக் கட்டடத்தில் உள்ள தேன்கூடுகளை அழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.