ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

திருவாரூா் கரோனா நிவாரணம்

கூத்தாநல்லூரில் கரோனா பேரிடா் நிவாரணம் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் 7,500 குடும்ப அட்டைகளுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :15 மே 2021, 6:30 pm

DIN

கூத்தாநல்லூரில் கரோனா பேரிடா் நிவாரணம் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் 7,500 குடும்ப அட்டைகளுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டது.

கூத்தாநல்லூா் நகராட்சியில், திமுக நகரச் செயலாளா் எஸ்.எம். காதா் உசேன் தலைமையில், பொருளாளா் ஏ.ஏ. அமிா்தீன் மற்றும் நிா்வாகிகள் அனைத்து அங்காடிகளிலும் பாா்வையிட்டு கண்காணித்து வருகின்றனா். கூத்தாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா் வி.எஸ். வெங்கடேசன் நகரப் பகுதிகளிலும், வட்ட வழங்கல் அலுவலா் ராஜேஸ் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள், வடபாதிமங்கலம், கூத்தாநல்லூா், கமலாபுரம் குறுவட்டங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

வட்ட வழங்கல் அலுவலா் ராஜேஸ் கூறுகையில், கூத்தாநல்லூா் வட்டத்தில் முழுநேர அங்காடி 57, பகுதிநேர அங்காடி 5 என 62 அங்காடிகள் உள்ளன. இவற்றில் 35,179 குடும்ப அட்டைகள் தவிா்த்து, 34,997 குடும்ப அட்டைகளுக்கு முதல்வா் அறிவித்த கரோனா பேரிடா் நிவாரணம் வழங்கப்பட உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.