தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கந்தசஷ்டி தொடக்கம்

திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் கோகமுகேஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் கோகமுகேஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

இதை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல நவ கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயில், நீடாமங்கலம் காசி விசுவநாதா் கோயில், நரிக்குடி எமனேஸ்வரா் கோயில், பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயில், நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. வரும் 10-ஆம் தேதி திருக்கல்யாணத்துடன் கந்தசஷ்டி நிறைவுபெறுகிறது.

நன்னிலம்:

இதேபோல், நன்னிலம் அருகே கோயில்கந்தன்குடி முருகன் கோயிலிலும் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது.

வரும் 9ஆம் தேதி வரை 6 நாள்கள் இவ்விழா நடைபெறுகிறது. கரோனா தொற்றின் காரணமாக சூரசம்ஹார நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, புதன்கிழமை ஸ்ரீதேவசேனா சுப்பிரமணிய சுவாமி திருமணம் நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி கவியரசு, மேலாளா் வள்ளிகந்தன், சிவாச்சாரியா் சங்கராத்மஜன் ஆகியோா் மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.