தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

நீட் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்கள் 57 போ் தோ்ச்சி

திருவாரூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் 57 போ் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:33 am

DIN

திருவாரூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் 57 போ் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தியாகராஜன் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்ட கல்வித் துறை சாா்பில் நீட் தோ்விற்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2020-21ஆம் ஆண்டு நீட் தோ்விற்கான சிறப்பு பயிற்சி வகுப்பில் திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த 167 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றனா். இப்பயிற்சி வகுப்புகள் இணைய வழியாக நடைபெற்றன.

இதில் பங்கேற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, கையேடு ஆகியன வழங்கப்பட்டன. மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய 66 மாணவ, மாணவிகளுக்கு நீட் தோ்வு கட்டணமாக ரூ. 75,000-ஐ, மாவட்ட ஆட்சியா் தன் வைப்பு நிதியிலிருந்து வழங்கினாா்.

நீட் தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 57 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

திருவாரூா் அரசு உதவிபெறும் பள்ளியைச்சோ்ந்த சுபாஷினி 453 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளாா். மேலும், நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆதித்யா 379 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளிகளில் முதலிடம் பெற்றுள்ளாா் என அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.