நாளை வாக்காளா் பட்டியல் திருத்த முகாம் தொடக்கம்
திருவாரூா் மாவட்டத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.


திருவாரூா் மாவட்டத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2022-ஆம் ஆண்டு ஜன. 1- ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, திருவாரூா் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி (தனி), மன்னாா்குடி, திருவாரூா், நன்னிலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான 1,178 வாக்குச்சாவடி நிலையங்கள் உள்ளடக்கிய 677 வாக்குச்சாவடி மையங்களில் நவ. 13, 14 மற்றும் நவ. 27, 28 ஆகிய தேதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, இந்திய தோ்தல் ஆணைய அறிவுரையின்படி, நவ. 20, 21 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி, சிறப்பு முகாமில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். இதில் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...