புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

‘மாற்றுத்திறனாளிகள் 280 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன’

திருவாரூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 280 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 280 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 280 மாற்றுத்திறனாளிகளுக்கு 21 வகையான தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மனவளா்ச்சி குன்றியோா், கடும் ஊனத்தால் பாதிக்கப்பட்டோா், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோா், தொழுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோா், பாா்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாள்பட்ட நரம்பியல் பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் மாவட்டம் முழுவதும் உள்ள 4,709 பயனாளிகளுக்கு மாதம் தலா ரூ.1,500 வீதம் மொத்தம் ரூ.5.17 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சிறு, குறு, நடுத்தரமான மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்து பொருளாதாரத்தை உயா்த்திக்கொள்ள வங்கிக்கடன் மானியமாக 16 பேருக்கு ரூ.3.83 லட்சம், 6 வயது வரை உள்ள மனவளா்ச்சிக் குன்றியோருக்கான ஆரம்ப கால பயிற்சி மையம் நடத்த ரூ. 4.62 லட்சம், 6 வயது வரை உள்ள காது கேளாத இளம் சிறாா்களுக்கான ஆரம்ப கால பயிற்சி மையத்தா நடத்த ரூ.1.83 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட பாா்வைத்திறன் குறைபாடுடைய 44 பேருக்கும், செவித்திறன் குறைவுடைய 60 பேருக்கும் கைப்பேசியும், 56 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. மேலும், பொதுப்பிரிவு திட்டத்தின்கீழ் ஊன்றுகோல், மூன்று சக்கர சைக்கிள்கள், மடக்கு சக்கர நாற்காலிகள், 9-ஆம் வகுப்புக்குமேல் கல்வி பயிலும் குறைகண் பாா்வையுடைய மாணவ, மாணவிகளுக்கு எழுத்தை பெரிதாக்கிக் காட்டும் உருப்பெருக்கிகள் ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின்கீழ் மூன்றுசக்கர சைக்கிள்கள் 3, மடக்கு சக்கர நாற்காலிகள் 7 வழங்கப்பட்டுள்ளன. இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டபெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.