நீடாமங்கலம் பகுதி கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா
நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல, ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட வைணவக் கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது.
இதேபோல, நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயிலில் நடைபெற்ற காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, விசாலாட்சி சமேத காசி விசுவநாதா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அப்போது, சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயில், பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரா் கோயில், நரிக்குடி எமனேஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா வழிபாடு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...