மூவாநல்லூர் ஊராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி
மூவாநல்லூர் ஊராட்சி தலைவர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.ரவி 77 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட மூவாநல்லூர் ஊராட்சி தலைவராக இருந்த திமுகவை சேர்த்த பிச்சைமுத்து உயிரிழந்ததையடுத்து , இந்த பதவிக்கான தற்செயல் தேர்தல் அக்.10 ஆம் தேதி நடைபெற்றது.
மூவாநல்லூர் ஊராட்சியில் மொத்த வாக்கு 1908 . பதிவான வாக்குகள் 1504 .அ தி மு க வேட்பாளர் எஸ்.ரவி 774, திமுக வேட்பாளர் பி.பிரபாகரன் 697 வாக்குகள் பெற்றனர். 77 வாக்குகள் கூடுதலாக பெற்று எஸ்.ரவி வெற்றி பெற்றார் . செல்லாத வாக்கு 33.
வெற்றி பெற்ற வேட்பாளர் எஸ்.ரவிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.சிவகுமார் சான்றிதழ் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...