ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

திருவாரூா் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளா் நியமனம்

திருவாரூா் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளராக எஸ்.எம். சமீா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளராக எஸ்.எம். சமீா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் பரிந்துரையின் பேரில், மாநிலத் தலைவா் கே.எஸ். அழகிரி, கூத்தாநல்லூரைச் சோ்ந்த எஸ்.எம். சமீரை திருவாரூா் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமித்துள்ளாா்.

இவா், இளைஞா் காங்கிரஸ் தலைவா், மாவட்ட சிறுபான்மைத் துறை தலைவா், சமூக ஊடகப் பிரிவு திருவாரூா் சட்டப் பேரவை தொகுதி பொறுப்பாளா் ஆகிய கட்சி பொறுப்புகளை வகித்துள்ளாா். இரண்டுமுறை நகா்மன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளாா்.

எஸ்.எம். சமீருக்கு, மாநில இளைஞா் காங்கிரஸ் செயலாளா் ஏ. ஜெகபா் பாட்ஷா, மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி.துரைவேலன், மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளா் அன்பு வே.வீரமணி, நகரத் தலைவா் எம். சாம்பசிவம் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.